/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரியா யோகா தியான பயிற்சி வகுப்பு பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்பு
/
கிரியா யோகா தியான பயிற்சி வகுப்பு பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்பு
கிரியா யோகா தியான பயிற்சி வகுப்பு பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்பு
கிரியா யோகா தியான பயிற்சி வகுப்பு பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்பு
ADDED : மார் 17, 2025 02:31 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கிரியா யோகா தியான பயிற்சி வகுப்பில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று பயிற்சி செய்தனர்.
மகான் பரமஹம்ஸ யோகானந்தர் நிறுவிய யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு ஓட்டல் சற்குருவில் நேற்று முன்தினம் நடந்தது. மூத்த சன்னியாசியான சுவாமி சுத்தானந்த கிரி சொற்பொழிவாற்றினார்.
அன்றாட வாழ்வில் கிரியா யோகாவின் நன்மைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகர் ஜோதி வாசம் எனும் இடத்தில், ஒருநாள் தியான வகுப்பு நடந்தது. ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று கிரியா யோகா குறித்து அறிமுகம் பெற்றவர்கள், இந்த தியான வகுப்பில் பதிவு செய்து பங்கேற்றனர்.
காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடந்த தியான வகுப்பில் சத்சங்கம், தியான பயிற்சி செயல்முறைக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூத்த சன்னியாசியான சுவாமி சுத்தானந்த கிரி, பிரம்மச்சாரி விரஜானந்தா ஆகியோர் கிரியா யோக தியான வகுப்பினை நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200 பேர் பங்கேற்று கிரியா யோகா பயிற்சி செய்தனர்.
கிரியா யோகா தியானம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை தொடர்ந்து நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என யோகதா சத்சங்க சொசைட்டி அறிவித்துள்ளது.
ஏற்பாடுகளை முருகானந்தம் தலைமையில் யோகதா சத்சங்க சொசைட்டி புதுச்சேரி தியான மைய நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.