ADDED : செப் 11, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் 15ம் தேதி நடக்கிறது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதுச்சேரி கவர்னர் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பொதுமக்கள் குறைதீர்வு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த மாத முகாம் வரும் 15ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது கலெக்டர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.