ADDED : அக் 16, 2025 02:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுருத்தலின் பேரில், ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், பொது மக்கள் குறை தீர்வு முகாம் நேற்று நடந்தது.இம்முகாமில், கடந்த மாதம் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் குலோத்துங்கன், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, அடிப்படை வசதிகள், பட்டா மாற்றம், குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்பு வேண்டியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், இலவச மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெற்ற கலெக்டர்,இம்மனுக்களின் மீது குறித்த நேரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில்,சப் கலெக்டர் சிவசங்கரன், வருவாய் அதிகாரி ஸ்ரீஜித் மற்றும் உட்பட பலர் பங்கேற்றனர்.