/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்
/
பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்
ADDED : ஜன 05, 2025 06:01 AM
பாகூர்: பாகூர் போலீஸ் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தலைமை தாங்கினார். பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், விஜயக்குமார், குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள், எஸ்.பி.,யை சந்தித்து தங்களது புகார்கள் குறித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கிராமப்புறங்களில் பைக்கில் அதிவேகமாக செல்வதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. விதிமீறும் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தற்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போலீஸ் நிலையங்களில், காவலர் பணியிடங்களை உயர்த்திட வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.