/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கத்தில் மக்கள் மன்ற நிகழ்ச்சி
/
கிருமாம்பாக்கத்தில் மக்கள் மன்ற நிகழ்ச்சி
ADDED : ஆக 10, 2025 08:50 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வரவேற்றார். எஸ்.பி., மோகன்குமார் முன்னிலை வகித்தார். சீனியர் எஸ்.பி., நித்யா ராமக்கிருஷ்ணன் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பொது மக்கள் தரப்பில் 'புதுச்சேரி - கடலுார் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், தலைக்கவசம் அணிவது, சாலை விதிகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.