/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான சிறுமியை கண்டுபிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
/
மாயமான சிறுமியை கண்டுபிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
மாயமான சிறுமியை கண்டுபிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
மாயமான சிறுமியை கண்டுபிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
ADDED : மார் 05, 2024 04:59 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் சிறுமி மாயமாகி 48 மணி நேரம் கடந்தும் போலீசார் கண்டுபிடிக்காததை கண்டித்து, சிறுமியின் உறவினர்கள் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி சோலை நகர் நாராயணன். டாடா ஏஸ் டிரைவர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். 2வது மகள் ஆர்த்தி, 9; அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடிய போது மாயமானார். முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
சிறுமி ஆர்த்தி மாயமாகி நேற்றுடன் 48 மணி நேரம் கடந்தும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை கண்டித்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே காலை 8:00 மணிக்கு சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எஸ்.பி. லட்சுமி சவுஜானியா, இன்ஸ்பெக்டர் தனசெல்வம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலைக்குள் சிறுமியை மீட்போம் என உறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் போலீசார் கூறியப்படி நேற்று இரவு வரை சிறுமி மீட்கப்படவில்லை.
சிறுமி முத்தியால்பேட்டை எல்லையை தாண்டி செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்குகள், குடிநீர் தொட்டிகளில் தவறி விழுந்து இருக்கலாமா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் டேங்குகளை இன்று ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

