ADDED : டிச 28, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்; நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பழைய காலனி பகுதியில் இறந்தவர்கள் சடலத்தை நத்தமேடு வழியாக 3 கி.மீ., தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் மற்றும் எரித்து வந்தனர்.
நத்தமேடு பகுதியில் உள்ள பழைய பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சடலம் எடுத்து சென்ற அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து, ஏரிப்பாக்கம் பழைய காலனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நெட்டப்பாக்கம் போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.