/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சந்திரகிரகணத்தை பார்வையிட்ட பொதுமக்கள்
/
சந்திரகிரகணத்தை பார்வையிட்ட பொதுமக்கள்
ADDED : செப் 08, 2025 02:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில், பொதுமக்கள் சந்திரகிரகணத்தையொட்டி, விண்வெளி வல்லுநர்களின் விளக்கவுரை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று இரவு நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 9.58 மணிக்கு துவங்கிய சந்திரகிரகணம் நள்ளிரவு 1.26 மணி வரை நீடித்தது. இதனை பொதுமக்கள் பார்க்கும் வகையில், புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நள்ளிரவு வரை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்த்து சென்றனர். சந்திர கிரகணத்தை யொட்டி புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் நேற்று மூடப்பட்டன.