/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுநல அமைப்புகள் டில்லியில் போராட்டம் நடத்த முடிவு
/
பொதுநல அமைப்புகள் டில்லியில் போராட்டம் நடத்த முடிவு
பொதுநல அமைப்புகள் டில்லியில் போராட்டம் நடத்த முடிவு
பொதுநல அமைப்புகள் டில்லியில் போராட்டம் நடத்த முடிவு
ADDED : மார் 30, 2025 03:28 AM
புதுச்சேரி : பொது அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில அந்தஸ்து வலியுறுத்தி டில்லி சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு தலைமையில் சமூக பொது நல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 60க்கும் மேற்பட்ட பொது நல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இதுவரை 16 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லி சென்று போராட்டம் நடத்துவது, மத்திய உள்துறை அமைச்சர், எம்.பி.,க்களை சந்தித்து புதுச்சேரி மாநில உரிமைகளை கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.