/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்
/
பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்
ADDED : நவ 24, 2024 04:58 AM
பு துச்சேரி பொதுப்பணித்துறையில் பி.டெக்., டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ., படித்துவிட்டு எம்.டி.எஸ் ஊழியர்களாக பல வருடங்களாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இளநிலை பொறியாளர், ஓவர்சீயர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை கூட தேர்வு செய்துள்ளனர்.
ஆனால், பொதுப்பணித்துறையிலேயே திறமையும், அனுபவத்துடன் பலர் இருக்கும்போது அவர்களை அடையாளம் கண்டு இளநிலைப் பொறியாளர்கள், ஓவர்சீயர், ஒர்க் இன்ஸ்பெக்டர். மெக்கானிக் உள்ளிட்ட பதவிகளுக்கு விகிதாச்சார அடிப்படையிலாவது பதவி உயர்வு கொடுப்பதற்கு பொதுப்பணி துறை உயர் அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லையே என, ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

