/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கான பட்டியல் வெளியீடு
/
ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கான பட்டியல் வெளியீடு
ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கான பட்டியல் வெளியீடு
ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கான பட்டியல் வெளியீடு
ADDED : டிச 19, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுகாதாரத்துறையில் மருத்துவ பணியிடங்களுக்கான ஒப்பந்த மருத்துவர் தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சிறப்பு பிரிவு மருத்துவர், பொதுபணிபிரிவு மருத்துவர், பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க விண்ணப்பம் பெறப்பட்டு, கடந்த மாதம் 14, 15ம் தேதி நேர்காணல் நடந்தது.
இதில் சிறப்பு மருத்துவர் புதுச்சேரிக்கு 5, காரைக்கால் 1, மாகி 2, பொது பணி மருத்துவர் புதுச்சேரிக்கு 15, காரைக்கால் 4, மாகே 4, ஏனம் 1 ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் விபரமும் வெளியிடப்பட்டது.