/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு கவுன்சிலிங் சீட் கிடைத்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு
/
கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு கவுன்சிலிங் சீட் கிடைத்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு
கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு கவுன்சிலிங் சீட் கிடைத்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு
கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு கவுன்சிலிங் சீட் கிடைத்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு
ADDED : அக் 14, 2024 07:58 AM
புதுச்சேரி : கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இணைய வழியாக மாப் அப் கவுன்சிலிங் நடத்தியுள்ள சென்டாக் சீட் கிடைத்த மாணவர்களின் வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது.
நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக மாப் அப் கவுன்சிலிங் நடத்தி, வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியலை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் நேற்று சென்டாக் வெளியிட்டுள்ளது.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய லாகின் வாயிலாக ஆட்சேபனையும் தெரிவிக்கலாம். சீட் ஒதுக்கீடு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆட்சேபனைகள் அனைத்தும் பரிசீலனை செய்த பிறகு, மாப் அப் கவுன்சிலிங்கில் சீட் கிடைத்த புரவோஷனல் பட்டியல் வெளியிடப்படும்.
எனவே இன்று 14ம் தேதி முதல் சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுக்கு சீட் கிடைத்தற்கான மாணவர் சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்ந்து சீட் கிடைத்த கல்லுாரிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சென்று 18ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும். தேவையான ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பித்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
ஆன்லைன் மாப் அப் கவுன்சிலிங் வரைவு பட்டியல் வெளியீடு என்பது உத்தேச பட்டியல் மட்டுமே. இது மாற்றத்திற்குட்பட்டது.
இதனை கொண்டு மாணவர்கள் சட்டத்தின்படி சீட் கோர முடியாது. இந்த மாப் அப் கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தால் ஏற்கனவே முதல் நான்காம் கட்ட கலந்தாய்வு மூலம் பெற்ற சீட் தானாகவே ரத்தாகிவிடும்.
மீண்டும் அப்படிப்புகளில் சேர முடியாது. தற்போது கிடைத்த கல்லுாரியில் கிடைத்த சீட்டில் மட்டுமே சேர முடியும். இதேபோல் மாப் அப் கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்பட்டதால், நீட் அல்லாத மற்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.
மாணவர்கள் இதுவரை புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, ஜாதி சான்றிதழ்களை சமர்பிக்காத மாணவர்கள் குறை தெரிவிப்பு பிரிவில் சான்றிதழ்களை டேஷ்போர்டு வாயிலாக 18ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
உதவிக்கு 0413-2655570, 2655571 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.