/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழு அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வு உத்தேச அட்டவணை வெளியீடு
/
ஏழு அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வு உத்தேச அட்டவணை வெளியீடு
ஏழு அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வு உத்தேச அட்டவணை வெளியீடு
ஏழு அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வு உத்தேச அட்டவணை வெளியீடு
ADDED : பிப் 23, 2024 03:31 AM
புதுச்சேரி: ஏழு அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்விற்கான உத்தேச அட்டவணையை நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெற்றது.
இதில் 1200 அரசு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு விட்டது.மீதமுள்ள பணியிடங்களை போட்டி தேர்வு நடத்த நிர்வாக சீர்த்திருத்த துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இருப்பினும் லோக்சபா தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் மீதமுள்ள விண்ணப்பம் பெறப்பட்ட அரசு பணியிடங்களுக்கு எப்போது போட்டி நடத்தப்படும் என இளைஞர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து விண்ணப்பம் பெற்ற ஏழு அரசு பணியிடங்களுக்கான உத்தேச போட்டி தேர்வு நடக்கும் தேதியை நிர்வாக சீர்த்திருத்த துறை வெளியிட்டுள்ளது. அதன்படி காவல் துறையின் ஊர்க்காவல் படை ஆண்கள்,பெண்கள் வீரர்கள் தேர்வு ஜூன் மாதம் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதேபோல் ஜூன் 30ம் தேதி கூட்டுறவு துறையின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணி யிடங்களுக்கும், ஜூலை 14ம் தேதி திட்ட ஆராய்ச்சி துறையின் திட்ட ஆய்வாளர் (இன்வஸ்டிகேட்டர்) பணிக்கும், ஜூலை 28ம் தேதி தீயணைப்பு துறை நிலைய அதிகாரி மற்றும் தீயணைப்பு வீரர் ஓட்டுநர் கிரேடு-3 பணியிடத்திற்கும், ஆகஸ்ட் 11ம் தேதி தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும் போட்டி தேர்வு நடக்கும் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி தேதி நடக்கும் மையங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் தகவல்களுக்கு ecruitment.py.gov.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
இத்தகவலை நிர்வாக சீர்த்திருத்த துறையின் தேர்வு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா வெளியிட்டுள்ளார்.