ADDED : ஜூலை 03, 2025 12:57 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 6வது பன்னிரு திருமுறை மாநாட்டில் நாராயணசாமி எழுதிய பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பன்னிரு திருமுறை ஆய்வு நுாலை வெளியிட்டார். அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் நீதிபதி முருகபூபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நுாலாசிரியர் கலைமாமணி நாராயணசாமி, முருகசாமி, நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள், டாக்டர் சங்கரதேவி, கடலுார் இளங்கோவன், தஞ்சை மாணிக்கவள்ளி ஆகியோர் உள்ளனர்.
