sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளை நவீனமயமாக்க பா.ஜ., கோரிக்கை

/

எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளை நவீனமயமாக்க பா.ஜ., கோரிக்கை

எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளை நவீனமயமாக்க பா.ஜ., கோரிக்கை

எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளை நவீனமயமாக்க பா.ஜ., கோரிக்கை


ADDED : செப் 27, 2011 11:40 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை நவீனமயமாக்க வேண்டும் என பா.ஜ., மாநில செயலாளர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள் ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது.

மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் கொலை செய்யும் கூலிப்படைகள், குற்றவாளிகள் நிறைந்த நகரமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. அரசின் மென்மையான போக்கும், போலீஸ் துறை தன்னிச்சையான செயல்பாடுகள் இல்லாததே இதற்கு காரணம்.குண்டர் தடுப்புச் சட்டம் சரிவர செயல்படுத்தவில்லை. மத்திய சிறைச்சாலை குற்றவாளிகளுக்கு சகல வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கொலையை வெளிமாநில கூலிப் படையினர் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். எல்லைப் பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்படாமல் உள்ள காரணத்தினால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.கீற்றுக் கொட்டகையில் பெயரளவில் உள்ள செக் போஸ்ட்டுகளை நவீனமயமாக்க வேண்டும். அங்கு சிசிடிவி கேமரா கொண்ட கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து மதுக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us