sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பல்வேறு அமைப்புகள் நடத்திய காந்தி பிறந்த நாள்

/

பல்வேறு அமைப்புகள் நடத்திய காந்தி பிறந்த நாள்

பல்வேறு அமைப்புகள் நடத்திய காந்தி பிறந்த நாள்

பல்வேறு அமைப்புகள் நடத்திய காந்தி பிறந்த நாள்


ADDED : அக் 04, 2011 01:54 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் , காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில், இயக்குனர் ராமதாஸ், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு நிதி அதிகாரி ராகவன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர் மூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி வல்லத்தான் செய்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்து சார்பில் நடந்த விழாவில், காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.கொம்பாக்கம் செட்டிக்குளம் மக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் நடந்த விழாவில் கவுரவத் தலைவர் கிருஷ்ணராஜேந்திரன், தலைவர் அய்யப்பன், பிரமுகர்கள் தினேஷ், மனோகரன், ஞானசேகரன், சசி, முருகன் உள்ளிட்டோர் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முதலியார்பேட்டை செல்வஜோதி மாதர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்கத் தலைவி ஜோதி தலைமை தாங்கினார். முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. செல்வி நன்றி கூறினார்.தவளக்குப்பம் மகாத்மா காந்தி சுமை தூக்குவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவராமன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us