sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரி கல்வி அமல்படுத்த தேசியவாத காங்., கோரிக்கை

/

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரி கல்வி அமல்படுத்த தேசியவாத காங்., கோரிக்கை

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரி கல்வி அமல்படுத்த தேசியவாத காங்., கோரிக்கை

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரி கல்வி அமல்படுத்த தேசியவாத காங்., கோரிக்கை


ADDED : ஆக 17, 2011 04:05 AM

Google News

ADDED : ஆக 17, 2011 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என, தேசியவாத காங்., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு பள்ளிகளில் வெவ்வேறு விதமான கல்வி முறைகள் செயல்படுகின்றன. சில அரசு தொடக்கப் பள்ளிகளில் தமிழகத்தைப் பின்பற்றி சமச்சீர் கல்வி நடைமுறையில் உள்ளது. வேறு சில தொடக்கப் பள்ளிகளில் சமச்சீர் கல்விக்கு மாறுபட்ட புத்தொளிர் கல்வி (ஸ்மார்ட் எஜூகேசன்) நடைமுறையில் உள்ளது.

கடந்த கால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட புத்தொளிர் தொடக்கப்பள்ளிக் கல்வியின் நிலைப்பாடு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான கல்வியைப் போதிப்பது என்பது எப்படி சமச்சீர் கல்வியாகும்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அல்லது அனைத்துப் பள்ளிகளிலும் புத்தொளிர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us