/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொம்மையாபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
/
பொம்மையாபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 03, 2011 01:54 AM
புதுச்சேரி : பொம்மையாபாளையம் சமயபுர மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் பொம்மையாபாளையத்தில் அமைந்துள்ள சமயபுர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.முன்னதாக, காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்து, மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடந்தது.
இதில் பொம்மையாபாளையம், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை சமயபுர மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.