/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - திருநள்ளாறுக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
/
புதுச்சேரி - திருநள்ளாறுக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
புதுச்சேரி - திருநள்ளாறுக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
புதுச்சேரி - திருநள்ளாறுக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்
ADDED : நவ 10, 2024 04:24 AM
புதுச்சேரி : புதுச்சேரி பி.ஆர்.டி.சி., மூலம் நேற்று (9ம் தேதி) முதல் புதுச்சேரியில் இருந்து நேரடியாக திருநள்ளாறு சென்றுவர பஸ்கள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் பகுதிக்கு செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்களை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் இன்றி சனி பகவானை தரிசிக்கும் வகையில், திருநள்ளாறு வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குனர் உத்தரவுப்படி புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பஸ்களை திருநள்ளாறு வரை சென்று வரும் வகையில் நீட்டிப்பு செய்து, நேற்று இயக்கப்பட்டது. அதன்படி, தினமும் இரவு 11:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து திருநள்ளாறுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணம் ரூ. 158 ஆகும்.
மேலும், பிரதி வெள்ளிக்கிழமைகளில் சென்னை யில் இருந்து இரவு 9:30, 10:30 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் பஸ்கள், திருநள்ளாறு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து திருநள்ளாறு செல்லும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி நேராக திருநள்ளாறு கோவிலுக்கு செல்லலாம்.