/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - திருப்பதி ரயில் ரத்து
/
புதுச்சேரி - திருப்பதி ரயில் ரத்து
ADDED : அக் 13, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : திருவள்ளூர் கவரைப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து காரணமாக, புதுச்சேரி - திருப்பதி ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை வழியாக பீஹாரின் தர்பங்கா பகுதிக்கு செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை மார்க்கத்தில், லுாப்லைனில், நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக திருப்பதி - புதுச்சேரி ரயில் (எண்: 16111) நேற்று காலை 4:00 மணிக்கும் அதேபோல, புதுச்சேரி - திருப்பதி ரயில் ( எண்: 16112) நேற்று மதியம் 3:00 மணிக்கும் ரத்து செய்யப்பட்டது.