/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி கண்ணாடி யில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி நடிகை ஆராத்யா
/
காந்தி கண்ணாடி யில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி நடிகை ஆராத்யா
காந்தி கண்ணாடி யில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி நடிகை ஆராத்யா
காந்தி கண்ணாடி யில் கவனத்தை ஈர்த்த புதுச்சேரி நடிகை ஆராத்யா
ADDED : செப் 14, 2025 01:45 AM

இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் கே.பி.ஒய்., பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் தான் காந்தி கண்ணாடி. இப்படம் அன்மையில் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்துடன் வரவேற்பினை பெற்றது.
படத்தின் இயக்குநர் ெஷரீப், ஏராளமான காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடியும் தற்போதைய காலக்கட்டத்தில், இளமை பருவத்தில் மட்டும் இன்றி, 60 வயதை தாண்டியும், அன்பை வெளிப்படுத்தி திகட்ட திகட்ட காதலிப்பதே உண்மையான காதல், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.இதில் நம்ம புதுச்சேரி நடிகை ஆராத்யாவும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நடிப்பில் குறை வைக்கவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தார்.
ஆராத்யா புதுச்சேரி மண்ணின் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர். ஆரம்ப பள்ளியில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் முடிந்த அவர், பி.டெக்., சிவில் படிப்பினை மணக்குள விநாயகர் இன்ஜினியரிங் கல்லுாரியில் முடித்தார். இவர் நடித்த மதிமாறன் படம் அமோசன் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி, திரை உலகில் கவனத்தை ஈர்த்து அனைவராலும் பேசப்பட்டது. நடிகை ஆராத்யாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதன் மூலம் சினிமாத்துறையில ஆராத்யாவிற்கு சூப்பரான ஓபனிங் கிடைத்தது. இதுக்கப்புறமா, ஆராத்யாகாட்டுல பட மழைதான்.இதுவரை 12 சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளில் புக்காகி வருகின்றார்.எந்த சினிமா பின்னணி இல்லாமல் புதுச்சேரியில் இருந்து ஹீரோயினாகி உள்ள நடிகை ஆராத்யாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.