/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஏ.எப்.டி., மில்லை ஏற்று நடத்த தயார் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
/
புதுச்சேரி ஏ.எப்.டி., மில்லை ஏற்று நடத்த தயார் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
புதுச்சேரி ஏ.எப்.டி., மில்லை ஏற்று நடத்த தயார் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
புதுச்சேரி ஏ.எப்.டி., மில்லை ஏற்று நடத்த தயார் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
ADDED : டிச 15, 2024 05:50 AM

புதுச்சேரி : ஏ.எப்.டி., மில்லை அரசால் நடத்த முடியவில்லை என்றால், எங்களிடம் கொடுத்தால் நடத்த தயாராக உள்ளதாக லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம் மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., க்கள் 3 பேர் ஏற்பாட்டில் சில வாரங்களுக்கு முன் காமராஜர் நகர் தொகுதியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்றது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல ஆண்டிற்கு முன்பு மூடப்பட்ட ஏ.எப்.டி., மில் தொழிலாளர்களின் இழப்பீடு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.எப்.டி., மில் நுழைவு வாயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது;
புதுச்சேரி மையப்பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பில் உள்ள மில்லை பூட்டி வைத்திருப்பது மிகப்பெரிய துரோகம். நான் பரம்பரை பணக்காரன் இல்லை. எனது தந்தை 10 வயது முதல் தெரு தெருவாக லாட்டரி சீட்டு விற்று இந்த நிலைக்கு வந்துள்ளார். இன்று இந்திய அரசுக்கு ஆண்டிற்கு ரூ. 5,000 கோடி ஜி.எஸ்.டி., கட்டி வருகிறோம்.
பல தொழிலபதிர்கள் தொழில் செய்ய பணம் வைத்து கொண்டு இடம் இன்றி அலைந்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில், நகரின் மையப்பகுதியில் இவ்வளவு பெரிய இடம் இருந்தும் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது மிகப்பெரிய துரோகம். இது தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் குரல் எழுப்பி கேட்க வேண்டும். 2,000 பேருக்கு சம்பளம் நிலுவை தொகை வழங்கப்படவில்லை எனில் தொழிலாளர்கள் எப்படி குடும்பம் நடத்துவர்.
அரசின் வேலை, மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும். நாங்கள் தொழில் செய்பவர்கள். அரசியலில் நல்ல சூழ்நிலை இல்லாததால் அரசியலுக்கு வர வேண்டி உள்ளது. நம் நாட்டை இப்படியே விட்டு சென்றால் யார் வந்து காப்பாற்றுவது என்ற எண்ணத்தில் இறங்கி வருகிறோம்.
எங்களுக்கு இங்கு வரவேண்டிய அவசியமும் இல்லை. பகையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது ஆழ்மனது எண்ணம்.
மில்லை உங்களால் நடத்த முடியவில்லை எனில் எங்களிடம் கொடுங்கள். நானே ஒரு திட்டம் தயாரித்து, நாளையே அதற்கான நிதி கொடுத்து, வேலை வாய்ப்பு கொடுப்பதுடன், அரசின் வருவாய் உயர்த்தி கொடுக்கிறேன். வாய்ப்பு இருந்தும் வீண் செய்வது நல்லதல்ல. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.