/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராம வங்கியில் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' திட்டம் துவக்கம்
/
கிராம வங்கியில் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' திட்டம் துவக்கம்
கிராம வங்கியில் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' திட்டம் துவக்கம்
கிராம வங்கியில் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' திட்டம் துவக்கம்
ADDED : ஜன 20, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கிராம வங்கியில் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' என்ற புதிய சிறப்பு வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
555 நாட்களுக்கு அதிக வட்டி தரும் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை, கிராம வங்கி தலைவர் ரத்தினவேல் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும், மற்றவர்களுக்கு 7.0 சதவீதம் வட்டியும் வழங்கப்படும். தற்போது அமலில் உள்ள 444 நாட்களுக்கான புதுவை வசந்தம் என்ற வைப்பு திட்டம் தொடரும் என கிராம வங்கி தலைவர் தெரிவித்தார்.