தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடிமை பணி விளையாட்டு போட்டிக்கு புதுச்சேரி அணி தேர்வு அறிவிப்பு

குடிமை பணி விளையாட்டு போட்டிக்கு புதுச்சேரி அணி தேர்வு அறிவிப்பு

குடிமை பணி விளையாட்டு போட்டிக்கு புதுச்சேரி அணி தேர்வு அறிவிப்பு


UPDATED : நவ 18, 2026 07:05 PM

ADDED : நவ 18, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:05 PM ADDED : நவ 18, 2026 07:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அகில இந்திய குடிமைப் பணிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் புதுச்சேரி அணி தேர்வுக்கான ஊழியர்கள் தேர்வுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை இயக்குநர் வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அகில இந்திய குடிமைப் பணிகள் விளையாட்டுப் போட்டி 2026–27ம் ஆண்டிற்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் புதுச்சேரி சார்பாக பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன.

அதனை தொடர்ந்து, புதுச்சேரி அணியை தேர்வு செய்வதற்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 2ம் தேதி வில்லியனுார், ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் ஹாக்கி போட்டி, 10ம் தேதி உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டி, 24ம் தேதி கோரிமேடு, போலீஸ் மைதான வளாகத்தில் உள்ள சிந்தடிக் டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் போட்டியும் நடக்கிறது.

மேலும், கூடைப்பந்து போட்டிக்கான அழைப்பு கடிதமும் மத்திய அரசிடமிருந்து தற்போது பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, புதுச்சேரி அணியை தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டி நடத்தப்படும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

எனவே, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு துறைகளில் பணிபுரியும் நிரந்தர அரசு ஊழியர்கள், மேற்கண்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு தேர்வு போட்டிகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளின் அடிப்படையில், இதர விளையாட்டு போட்டிகளுக்கும் தகுந்த காலத்தில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, புதுச்சேரி அணிகள் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே, கோவாவில் நடந்து வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற புதுச்சேரி அணி, மத்திய பிரதேச அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று தொடர்ந்து முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us