சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி திரிபுராவை வீழ்த்தியது புதுச்சேரி அணி
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி திரிபுராவை வீழ்த்தியது புதுச்சேரி அணி
UPDATED : அக் 29, 2026 10:42 PM
ADDED : அக் 29, 2026 10:37 PM

புதுச்சேரி: சி.கே.நாயுடு கோப்பைக்கான போட்டியில் புதுச்சேரி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 23 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 4 -நாள் சி.கே. நாயுடு கோப்பைக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 27ம் தேதி புதுச்சேரி சீகெம் மைதானத்தில் தொங்கிய போட்டியில் புதுச்சேரி – திரிபுரா அணிகள் மோதியது.
முதலில் களம் இறங்கிய திரிபுரா அணி 55.3 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரியின் நமன் சர்மா 5 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 221 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பிரவீன் 57 ரன்கள் எடுத்தார். புதுச்சேரி அணி 84 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்rசில் திரிபுரா அணி 225 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் நமன் சர்மா 6 விக்கெட் எடுத்தார். பின், 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸ் தொடங்கிய புதுச்சேரி அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11 விக்கெட் வீழ்த்திய நமன் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
