/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., கிளை நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்

ADDED : டிச 10, 2024 06:31 AM
புதுச்சேரி: பா.ஜ., கிளை தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் பா.ஜ., புதிய உறுப்பினர்கள் சேர்க்கை- அன்மையில் நடந்து முடிந்தது. மொத்தம் 1,47,700 பேர் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து கிளை தேர்தலும் விறுவிறுப்பாக நடந்த வருகின்றது.
இந்தநிலையில், புதுச்சேரி பா.ஜ., அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், அசோக்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 962 கிளைகளில் தேர்தல்களை வரும் டிசம்பர் 15க்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து தொகுதி தலைவர் தேர்தல், மாவட்ட பொறுப்பாளர் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்.
தொகுதி தலைவர்கள் தேர்தலில் மகளிருக்கும் வாய்ப்பு தர அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் பட்டியல் இன பெண்களுக்கும் தேர்தலில் முன்னுரிமை தர தெரிவிக்கப்பட்டது.