/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ.,வில் நிர்வாகிகள் விலகல்
/
புதுச்சேரி பா.ஜ.,வில் நிர்வாகிகள் விலகல்
ADDED : செப் 12, 2025 03:52 AM
புதுச்சேரி: பா.ஜ., மாஜி தலைவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து விலகல் தொடர்கிறது.
புதுச்சேரி பா.ஜ., வில் மாநில தலைவராக இருந்த சாமிநாதன் கடந்த 2023ம் ஆண்டு மாற்றப்பட்டார்.
ஆனால், அவருக்கு வேறு பதவி எதுவும் வழங்காத நிலையில், அவர் கடந்த 9ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் லாஸ் பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 300 பேர் பா.ஜ., வில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி முன்னாள் தலைவர் காமராஜ், பட்டியல் அணி மாவட்ட முன்னாள் தலைவர் பிரதீப்குமார், துணை தலைவர் இளமணதி வர்த்தக அணி சுபாஷ், தொகுதி முன்னாள் நிர்வாகிகள் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாலமுரளி, செந்தில்குமார், பத்மன், மகளிரணி மாலதி உட்பட 200க்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.