sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி முதல்வருக்கு முதுகு வலி 3 நாள் ஓய்வெடுக்க டாக்டர் பரிந்துரை

/

 புதுச்சேரி முதல்வருக்கு முதுகு வலி 3 நாள் ஓய்வெடுக்க டாக்டர் பரிந்துரை

 புதுச்சேரி முதல்வருக்கு முதுகு வலி 3 நாள் ஓய்வெடுக்க டாக்டர் பரிந்துரை

 புதுச்சேரி முதல்வருக்கு முதுகு வலி 3 நாள் ஓய்வெடுக்க டாக்டர் பரிந்துரை


ADDED : ஜன 21, 2026 06:56 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முதுகு வலியால் அவதிப்படுவதால், மூன்று நாள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தினமும் காலை, மாலையில், தன் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இந்நிலையில், முதல்வர் சில தினங்களாக முதுகு வலி யால் அவதிப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் மாகியில் நடந்த அரசு விழாவிற்கு செல்லாமல், சட்டசபையில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்து கொண்டார். நேற்று அவருக்கு முதுகு வலி அதிகரித்தது.

டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மூன்று நாள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

அதையேற்று முதல்வர் ரங்கசாமி, திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக, நேற்று ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்வர் பங்கேற்கவில்லை.






      Dinamalar
      Follow us