/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கோல்ட்ரிப்' மருந்திற்கு விற்பனை பிரதிநிதி இல்லாததால் புதுச்சேரி குழந்தைகள் பேராபத்தில் இருந்து தப்பியுள்ளனர்

ADDED : அக் 12, 2025 04:31 AM
'கோல்ட்ரிப்' இருமல் மருந்தினை குடித்த ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் 22 குழந்தைகள் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உடனடியாக காஞ்சிபுரம் மாவட்டத்த்தில் இயங்கி வந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், அதன் உரிமையாளர் ரங்கநாதன், 75, மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
அதனையொட்டி, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மருந்தகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதில் புதுச்சேரியில் உள்ள ஒரு மொத்த மருந்து விற்பனை நிறுவனம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 'கோல்ட் ரிப்' மருந்தை மொத்தமாக விற்பனைக்கு வாங்கியுள்ளது.
அதன் பின்னர் அந்த நி றுவனத்தால், மருந்தினை மருந்தகங்களில் விற்பனைக்கு அனுப்புவதற்கு விற்பனை பிரதிநிதியை அனுப்புமாறு நிறுவனத்திடம் கோரியது.
ஆனால் மருந்து நிறுவனத்தினர் விற்பனைப் பிரதிநிதியை அனுப்பாததால், 'கோல்ட்ரிப்' மருந்து எந்த மருந்தகங்களுக்கு விற்பனைக்கு செல்லாமல் மொத்தமாக முடங்கிய நிலையில், மதகடிப்பட்டில் உள்ள ஒரு மருந்தகத்தில் மட்டும் இந்த மருந்து விற்பனைக்கு சென்றுள்ளது.
அந்த மருந்தகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஒருவருக்கு மட்டும் இந்த மருந்து டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற தகவல் மருந்தகத்தில் இல்லை. அதனைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை மருந்து விற்க தடை விதிதத்ததோடு, கடையை மூடி சீல் வைத்தனர்.
விற்பனை பிரதிநிதி இல்லாத காரணத்தினால் புதுச்சேரியில் உள்ள மருந்தகங்களுக்கு இந்த மருந்து விற்பனைக்கு செல்லாததால், புதுச்சேரி குழந்தைகள் பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.