/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி திணறல்
/
போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி திணறல்
ADDED : நவ 03, 2024 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
புதுச்சேரியில், தீபாவளி விடுமுறையையொட்டி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கடந்த, அக்., 30ம் தேதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிய துவங்கினர்.
இதனால், கடற்கரை, பாரதி பூங்கா, சட்டசபை வளாகம், நோனாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, புதுச்சேரி நகரமே ஸ்தம்பித்தது.
இதனால் உள்ளூர்வாசிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர்.