ADDED : ஜன 09, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா?
மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் வரை, சாலையில் தெரு விளக்கு எரியாமல், அப்பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.
காந்தி, புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை, ராஜாஜி நகரில் தெரு நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.
போக்குவரத்து பாதிப்பு
உப்பளம் சாலையில், வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கதிரவன், உப்பளம்.
ஆட்டோ நிறுத்துவதால் இடையூறு
ரயில்வே ஸ்டேஷன் முன்பு, சாலையில் ஆட்டோக்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மதிவாணன், சுப்பையா சாலை.
'குடிமகன்'களால் பயணிகள் அச்சம்
புதிய பஸ் நிலையத்தில், இரவில் மது குடிப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணன், உருளையன்பேட்டை.

