ADDED : ஜன 31, 2026 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை வண்டி வருமா?
திருபுவனைபாளையம் பகுதியில் குப்பை வண்டி சரியாக வராமல் குப்பைகள் சிதறி கிடக்கிறது.
திருநாவுக்கரசு, திருபுவனை.
குண்டும் குழியுமான சாலை
அண்ணா சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜ்குமார், புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை, ராஜாஜி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.
சாலை படுமோசம்
அரியாங்குப்பம் மாஞ்சாலை வீதி மிகவும் மேசமான நிலையில் உள்ளது.
இருசப்பன், அரியாங்குப்பம்.
ஜிப்மருக்கு டவுன் பஸ் தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
குமரன், புதுச்சேரி.

