/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க மரக்கன்று நடல்
/
புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க மரக்கன்று நடல்
புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க மரக்கன்று நடல்
புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க மரக்கன்று நடல்
ADDED : செப் 29, 2025 03:01 AM

வில்லியனுார்:புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் திருக்காஞ்சி கோவில் வளாக பகுதியில் மரக்கன்று நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலய வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலசங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் வரவேற்றார். கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் நலசங்க நிர்வாகிகள் வேலுசாமி, சபாஸ்டீன் மார்ஷல், கணேசன், அன்பு, கோடீஸ்வரன், இளங்கோவன், அரவிந்தன், பாண்டியராஜன் மற்றும் சங்க ஒருங்கிணைப்பு குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.