/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
காரைக்கால் : காரைக்காலில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்காலில் பஸ் செல்ல முடியாத கிராமப் பகுதிக்கு மக்கள் நலனுக்காக டாடாமேஜிக் டெம்போ வாகனங்களுக்கு மாவட்ட போக்குவரத்து துறை அனுமதி அளித்தது.
ஆனால் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய டெம்போக்கள் அனைத்தும் நகரப்பகுதியிலும், திருநள்ளாருக்கும் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த டெம்போக்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிரவிப்பகுதியில் டெம்போ கவிழ்ந்து 8 பேர் காயமடைந்தனர்.டெம்போக்களில் 8 பேருக்கு மேல் ஏற்ற மாட்டோம் என டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் போக்குவரத்து துறையினர் எழுதி வாங்கியுள்ளனர்.
ஆனால் அதைக் காற்றில் பறக்கவிட்டு டெம்போக்களில் அளவுக்கு அதிகமாக 30 பேரை ஏற்றிக் செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துறையினரும், போக்குவரத்து போலீசாரும் இதை கண்டும் காணாதது போல் உள்ளனர்.விபத்து ஏற்பட்ட பின் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பது சிறந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் டெம்போக்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.