/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
/
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : 'புதுச்சேரியில் அதிகரிக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., கூறினார்.
சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரியில் சமீப காலங்களாக சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் பல இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில், தங்க சங்கிலி வழிபறி, முதலியார்பேட்டையில் இரண்டு கொலைகள், அதிகாரி வீட்டில் கொள்ளை என சமூக விரோத செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர். குற்றங்களைச் செய்வது யார், எங்கிருந்து வருகின்றனர் என்பது போலீசாருக்குத் தெரியும். சம்பந்தப்பட்ட மாநில போலீஸ் உயரதிகாரிகளுடன் பேசி குற்றவாளிகளுக்குத் தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.