/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆபாச படம் காட்டிய புதுச்சேரி டிரைவர் கைது
/
ஆபாச படம் காட்டிய புதுச்சேரி டிரைவர் கைது
ADDED : ஜன 27, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் பள்ளி மாணவிகளுக்கு மொபைல் போனில் ஆபாச படங்களை காட்டிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் மடுகரை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார், 33; இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த 5ம் வகுப்பு மாணவிகள் 3 பேரிடம் தனது மொபைல் போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் நோக்கத்துடன் பேசினார்.
புகாரின் பேரில் பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் , டிரைவர் ராஜ்குமார், 33; மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

