/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும்... உயருகிறது; ஒழுங்குமுறை ஆணையத்திடம் பரிந்துரை
/
புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும்... உயருகிறது; ஒழுங்குமுறை ஆணையத்திடம் பரிந்துரை
புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும்... உயருகிறது; ஒழுங்குமுறை ஆணையத்திடம் பரிந்துரை
புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும்... உயருகிறது; ஒழுங்குமுறை ஆணையத்திடம் பரிந்துரை
ADDED : பிப் 15, 2024 05:38 AM

இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம், லப்போர்த் வீதியில் பி.எம்.எம்.எஸ்., அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், உயர்த்தப்பட உள்ள மின் கட்டணம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு, பொதுமக்களின் ஆட்சேபனைகள் கருத்துகள் கேட்கப்பட்டன.
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணை தலைவர் அலோக் தண்டன்,ஆணைய உறுப்பினர் ஜோதி பிரசாத் ஆகியோர் கருத்துகளை கேட்டறினர்.
அனைத்து பிரிவிருனருக்கும் மின் கட்டணங்களை உயர்த்த பரிந்துரை செய்துள்ளதால் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு கட்டணம் உயர்த்த கூடாது என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தப்பட்டது.
மின்துறை பரிந்துரை செய்துள்ள கட்டண விபரம்:
குடிசை வீடுகள்
வீட்டு உபயோகத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்த மின் துறை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரியில் குடிசைக்கு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் 1.45 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. இது யூனிட்டுக்கு 1.95 ரூபாய் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வீடுகள்
புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது, தற்போது ரூ.2.75 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதிலாக ரூ.6 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள்
வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் குறைந்த (எல்.டி.,)மின் இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.6 க்கு பதிலாக 6.50 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.7.05 கட்டணத்திற்கு பதிலாக ரூ.8 வசூலிக்கவும் மின் துறை பரிந்துரை செய்துள்ளது.
251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ரூ.7.80 கட்டணத்திற்கு பதிலாக ரூ.9 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வர்த்தக பயன்பாட்டில் உயர் மின் அழுத்த(எச்.டி.,) தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து, 6.50 ரூபாயாக உயர்த்த மின் துறை பரிந்துரை செய்துள்ளது.
தொழிற்சாலைகள்
குறைந்த அழுத்த தொழிலகங்களுக்கான கட்டணத்தை 6.35 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதேபோல் 11 கே.வி.,22 கே.வி.,அல்லது 33 கே.வி.,இணைப்பினை பெற்றுள்ள எச்.டி.,தொழிற்சாலைளுக்கான கட்டணம் 5.45 ரூபாயில் இருந்து 6 ரூபாய்க்கும்,110 கேவி.,132 கே.வி,மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்காக கட்டணம் 5.50 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மின்சார வாகனங்கள்
எலக்ட்ரீக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் முன்பு யூனிட்டிற்கு 5.33 ரூபாய் இருந்தது. இது 6 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விவசாயம்
விவசாயத்தினை பொருத்தவரை மின் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.அதே நிலையும் இந்தாண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது

