/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
/
புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
ADDED : செப் 20, 2024 03:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஹவுரா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வரும், 22ம் தேதியில் இருந்தும், புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் வரும், 25,ம் தேதியில் இருந்தும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, ராஜமுந்திரி நிலையத்தில் நின்று செல்லும்.
காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, காக்கிநாடா துறைமுகத்தை விட்டு புறப்பட்டு, செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும். செங்கல்பட்டில் இருந்து, புதுச்சேரிக்கு பகுதியாக ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் எக்ஸ்பிரஸ் வரும் 27ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, புதுச்சேரி -செங்கல்பட்டிற்கு பகுதி சேவையாக, ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், செங்கல்பட்டில் இருந்து, மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, அட்டவணைப்படி செல்லும்.