தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கால் பந்து கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி கால் பந்து கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி கால் பந்து கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : நவ 28, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கால்பந்து கழகத்திற்கு 2026–30 வரையிலான 4 வருடத்திற்கான, நிர்வாக தேர்தல் நேற்று முன்தினம், புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ஆசியா மஹாலில் நடந்தது.

இதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம், புதுச்சேரி அரசு ஓய்வு பெற்ற துணை செயலர் கனகராஜை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், வழக்கறிஞர் வேல்முருகனை உதவி தேர்தல் அதிகாரியாகவும் நியமித்து ஒப்புதல் வழங்கியது.

தேர்தல் நடைமுறைகள் கடந்த 7ம் தேதி துவங்கி, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு மனு பரிசீலனை முடிவுற்று, 27ம் தேதி ஓட்டு பதிவு நடத்துவதற்காக, புதுச்சேரி மாநில கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூடியது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பார்வையாளராக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாக அதிகாரி பெர்னாண்டோ, புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக குமரன் ஆகியோர் தேர்தல் நடைமுறை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சபாநாயகர் செல்வம், புதுச்சேரி ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி கனகராஜ், 2025ம் ஆண்டு விளையாட்டு மேம்பாட்டு சட்டம் மற்றும் புதுடில்லி கால் பந்து சம்மேளனம் சட்டத்தின் படி நடைபெற்ற தேர்தல் நடைமுறைகளை வாசித்து, அதன்படி புதுச்சேரி கால்பந்து சங்கத்திற்கு புதிய தலைவராக ராமலிங்கம், துணைத் தலைவர்களாக முருகானந்தம், சுகுமாரன், வரலட்சுமி, பொருளாளராக ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்களாக அமுதவாணன், முனியாண்டி, நாதமணி, ரவி, செந்தில்குமரன், சோனியா, சுருதி சுடர், வினோத்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

புதிதாக தேர்வான நிர்வாக குழுவினரால் தனசேகர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வெற்றி சான்றிதழை வழங்கினர்.

புதுச்சேரி கால்பந்து சங்கத்தில் பதிவு பெற்ற அனைத்து கால்பந்து அணிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us