/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் உத்தரவு
/
புதுச்சேரி அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் உத்தரவு
புதுச்சேரி அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் உத்தரவு
புதுச்சேரி அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் உத்தரவு
ADDED : டிச 27, 2024 05:55 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 14 ஆயிரம் குரூப் ஏ மற்றும் பி அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் வரும் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
நாடு முழுதும் உள்ள ஐ.ஏ.எஸ்., மற்றும் அரசு அதிகாரிகள் பணி விதிகளின்படி ஒவ்வொரு அதிகாரியும் தங்களது முந்தைய ஆண்டின், அசையா சொத்துகள், கடன்கள் குறித்த விபரங்களை அடுத்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவைகள் வழங்கப்படாது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பரிசுகளை வாங்குவதும் என்றாலும் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.
அத்துடன் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பரிசுகளை பெற்றாலும் அது பற்றியும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் 14 ஆயிரம் குரூப் ஏ மற்றும் பி அரசு அதிகாரிகள் சூழ்நிலையில் இவர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கான https://esalary.py.gov.in என்ற போர்ட்டல் வரும் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஜனவரி 31ம் தேதிக்குள் புதுச்சேரியை சேர்ந்த குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி, சொசைட்டி, தன்னாட்சி உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் உள்ள குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளும் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் விஜிலென்ஸ் கிளிரன்ஸ் கிடைக்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

