/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் உயிருக்கு ஆபத்து அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்' தகவல்
/
புதுச்சேரி கவர்னர் உயிருக்கு ஆபத்து அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்' தகவல்
புதுச்சேரி கவர்னர் உயிருக்கு ஆபத்து அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்' தகவல்
புதுச்சேரி கவர்னர் உயிருக்கு ஆபத்து அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்' தகவல்
ADDED : மார் 10, 2024 05:16 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் கவர்னர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அ.தி.மு.க., மாநில செயலாளர்அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரியில் கவர்னர் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை சிலர் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.
சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய கவர்னரை காங்., கட்சியினர் தடுத்ததுடன், அவரது கார் மீது பொருட்களை வீசினர்.
போலீசார் இல்லாமல் இருந்திருந்தால், கவர்னர் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பார். இது கண்டிக்கதக்கது.
புதுச்சேரியில் கஞ்சா ஆயில், கஞ்சா கிரீம், போதை ஸ்டாம்ப்,ஹெராயின், மெத் பவுடர், பிரவுன்சுகர் உள்ளிட்ட சர்வதேச போதைபொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன.
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர்சாதிக் உடன் புதுச்சேரியைச் சேர்ந்த சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்பில் உள்ளது குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இண்டியா கூட்டணியினர் போலீசில் குறிப்பிடாத சில இடங்களில் ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை தாக்கும் விதத்தில் செயல்பட்டனர்.
கையில் ஏதேனும் பொருள் இருந்தால் கவர்னர் மாளிகையில் வீசி இருப்பர்.
புதுச்சேரியில் ஒரு சிலரால் கவர்னர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டி.ஜி.பி., மத்திய கண்காணிப்பு துறை, ஐ.பி., உள்ளிட்டவை உரிய விசாரணை நடத்த வேண்டும்.
போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் உள்ள புதுச்சேரி நபர்களிடம் விசாரிக்க வேண்டும்.
போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என்றார்.
பேட்டியின்போது, இணை செயலாளர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன் உடனிருந்தனர்.

