/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எப்போதும் காங்., கோட்டை தான்; 20 தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் போர்க்கொடி
/
புதுச்சேரி எப்போதும் காங்., கோட்டை தான்; 20 தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் போர்க்கொடி
புதுச்சேரி எப்போதும் காங்., கோட்டை தான்; 20 தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் போர்க்கொடி
புதுச்சேரி எப்போதும் காங்., கோட்டை தான்; 20 தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் போர்க்கொடி
ADDED : ஏப் 27, 2025 05:28 AM
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆறு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்., கட்சி கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15-வது சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து ஆட்சியை பறி கொடுத்தது.2 தொகுதியில் மட்டுமே வெற்றிப்பெற்றது.
அதே நேரத்தில் கூட்டணியில் இருந்த தி.மு.க., 6 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் இரு கட்சிகளிடையே உரசல் நீடிக்கிறது.
இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அரசை எதிர்ப்பதில் தனித்தனியே போராட்டங்களை நடத்தின. அத்துடன் கூட்டணி பற்றி கவலைப்படாமல், வரும் தேர்தலில் இரு கட்சிகளும் 30 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் புதுச்சேரி வந்த காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது காங்., நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மனம் குமுறினர்.இன்றைக்கு வேண்டுமென்றால் தி.மு.க., 6 எம்.எல்.ஏ.,க்கள் வைத்திருக்கலாம்.
ஆனால் புதுச்சேரி எப்போதும் காங்., கோட்டை தான். கடந்த கால வரலாறு இதனை உணர்த்தும். எனவே வரும் சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி தலைமை எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் புதுச்சேரியில் காங்., கட்சி தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் இந்த உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என, ஒட்டுமொத்தமாகவே குமுறினர்.
அப்போது, குறுக்கிட்ட காங்., தலைவர் வைத்திலிங்கம், அப்படி சொல்லக்கூடாது. காங்., இல்லாமல் தி.மு.க., இல்லை. தி.மு.க., இல்லாமல் காங்., இல்லை. ஒன்றாகவே தேர்தலை சந்தித்து வெற்றிப்பெறுவோம்' என்றார்.
அப்போது டென்ஷனான நிர்வாகிகள், புதுச்சேரியை பொருத்தவரை காங்., கட்சியை நம்பி தான் தி.மு.க., இருக்கிறது. தி.மு.க.,வை நம்பி காங்., இல்லை. இதுதான் கள நிலவரம்.இதனால் போன தடவை 14 தொகுதியில் தான் காங்., நின்றது.
13 தொகுதிகள் தி.மு.க., விற்கும், கம்யூ., மற்றும் வி.சி.,க்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இம்முறை கட்சியை தி.மு.க., விடம் அடமானம் வைக்காமல் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும். அந்த அளவிற்கு தனித்து நிற்க காங்., கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது' என்றனர்.
கூட்டணிக்கு யார் தலைமை என்ற விவகாரத்தில் காங்., - தி.மு.க., தலைவர்கள் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து அடுத்தடுத்து பரஸ்பர சந்திப்புகளை நடத்தி வரும் சூழ்நிலையில் காங்., நிர்வாகிகள் 20 தொகுதிகளில் போட்டியிட வலியுறுத்தி போர்க்கொடி உயர்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

