'லி புதுச்சேரி ஹாக்கி' சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
'லி புதுச்சேரி ஹாக்கி' சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:54 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில 'லி புதுச்சேரி ஹாக்கி' சங்கத்தின் 2026-30ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
செண்பகா ஹோட்டலில் நடந்த தேர்தலுக்கு ஹாக்கி இந்தியா சம்மேளன தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அபய் நந்தன் அம்பஸ்தா, ஹாக்கி இந்தியாவின் பிரதிநிதியாக செந்தில் ராஜ்குமார், ஹாக்கி இயக்குநர் பூஷன் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் தேர்தல் பணிகளை பார்வையிட்டனர்.
தேர்தலில், லி புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் புதிய தலைவராக வரதராஜ், துணைத் தலைவர்களாக ரவிச்சந்திரன், தயாளன், இளவரசி ராஜசேகரன், பொதுச் செயலாளராக அரவிந்தன், பொருளாளராக சந்திரசேகர், இணைச் செயலாளர்களாக அன்பழகன், ஷாலினி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் அருண்குமார், ஜெயசெல்வக்கொடி, செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேசன், கார்த்திகேயன், ரம்யாதேவி, விளையாட்டு வீரர்ககள் குழு பிரதிநிதியாக ஹரிகிருஷ்ணன், ராதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் புதுச்சேரி மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டை அடித்தட்டு மற்றும் பள்ளி அளவில் ஊக்குவித்து, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு திறமையான வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
