UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் மது குடித்து ஊர் சுற்றி வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் மகன் சந்தோஷ், 23; வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டு மின்விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
