/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
/
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
ADDED : நவ 15, 2025 06:10 AM
புதுச்சேரி: தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி ைஹதராபாத் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ைஹதராபாத், ராஜமுத்திரிக்கு ஏ.டி.ஆர்., விமானம் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்ட ஏ.டி.ஆர் விமானம் புதுச்சேரி விமான நிலையத்தை நேற்று மாலை 5.20 மணிக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து இந்த விமானம் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தொழில்நுட்ப குழுவினர் சரி செய்தனர். இருப்பினும் ைஹதராபாத் விமான சேவை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'விமானத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப காரணமாக ைஹதராபாத் விமான சேவை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. இன்று 15ம் தேதி கிரவுண்ட் டெஸ்ட்டிற்கு பிறகு விமான சேவை மீண்டும் துவங்கும்.
விமானத்தில் பயணிக்க புக்கிங் செய்திருந்த 75 பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் சென்னை விமான நிலையத்தை சாலை மார்க்கமாக அடைந்து அங்கிருந்து பயணிக்க டாக்ஸியும், தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டது. விமான பயணத்தை கேன்சல் செய்தவர்களுக்கு முழு கட்டணம் அளிக்கப்பட்டது' என்றனர்.

