/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்
/
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்
ADDED : அக் 18, 2024 06:28 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜூ ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இடமாற்றம் செய்துள்ளது.
இதில் புதுச்சேரி அரசின் வேளாண், கால்நடை துறை, சுகாதார துறை செயலர் ராஜூ ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பணி யாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாஷா முட்கல் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை மாற்றம் இல்லாமல் 17 ஆகவே தொடர்கிறது.