/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
/
புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
ADDED : நவ 02, 2025 03:58 AM
புதுச்சேரி: கடற்கரை சாலையில் கோலாகலமாக நடந்த புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி அரசு சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நேற்று கொண்டாடப்பட்டது.
காலை 8:46 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின், முதல்வர் பேசியதாவது;
புதுச்சேரி விடுதலை திருநாள் என்பது புதுச்சேரி மக்களின் தேசிய உணர்வு, ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று சாதனைகளை நினைவு கூறும் நாளாகும்.
புதுச்சேரியில் சுப்பையா, செல்லான் நாயகர், அன்சாரி துரைசாமி, சுப்ரமணியம், எதுவார் குபேர், முத்துகுமரப்ப ரெட்டியார், வெங்கடசுப்பா ரெட்டியார் , முத்துப்பிள்ளை போன்றோர் தலைமையிலும், காரைக்காலில் பக்கிரிசாமி பிள்ளை, திருநள்ளாறு அரங்கசாமி நாயக்கர், மரிசவேரி, லெயோன் சென்ழான் போன்றோர் தலைமையிலும், மாகி பகுதியில் குமரன், பரதன் தலைமையிலும், ஏனாம் பகுதியில் ததாலா ரமணய்யா, காமிசெட்டி போன்றோர் தலைமையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய கடும் போராட்டங்களின் விளைவாக இந்த விடுதலையை நாம் பெற்றிருக்கிறோம்.
சுதந்திரம் பெற்றதற்கு காரணமாக தியாக செம்மல்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்தவோம்.
புதுச்சேரி விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், காரைக்காலிலும் நினைவிடம் அமைக்கப்படும்' என்றார்.
அணிவகுப்பு தொடர்ந்து, பல்வேறு படை வீரர்களின் அணிவகுப்பு முதலில், காவல்துறையின் ஆயுதப்படை பிரிவு, போக்குவரத்து பிரிவு, காவல்படை பிரிவு (ஆண்கள்), ஐ.ஆர்.பி.என்., காவல் படை பிரிவு (பெண்கள்), காவலர் இசை குழு, கமாண்டோ பிரிவு, ஊர்க்காவல் படை பிரிவு, தீயணைப்பு துறையினர் அணிவகுத்தனர்.
மாணவர் படைகள் அடுத்து என்.சி.சி., தரைப்படை, கடற்படை, விமானப்படை பிரிவு மாணவ, மாணவிகளும் அணிவகுத்து கரகோஷத்தை பெற்றனர்.
பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வ.உசி., அரசு மேனிலைப்பள்ளி, ஜீவானந்தரம் அரசு மேனிலைப்பள்ளி, சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் பள்ளி, சின்னாத்தா அரசு பெண்கள் பள்ளி, பிரசிடன்சி மேல்நிலைப் பள்ளி, அமலோற்பவம் மேனிலைப்பள்ளி, புனித சூசையப்பர் பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது.
கலை நிகழ்ச்சி மேலும் ஜவகர் சிறுவர் இல்லம், காந்தாரா கலைக்குழு, மாமல்லன் வீர விளையாட்டு வளர்ச்சி கழகம், அவுட் லாஸ்டர்ஸ் நடனப்பள்ளி, சத்ரிய அகாடமியின்கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன் குமார், ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலர் சரத் சவுகான், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சந்தியசுந்தரம், அரசு செயலர்கள் மணிகண்டன், கேசவன், முகமது அசன் அபித், சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், இயக்குநர்கள், தியாகிகள், கலந்து கொண்டனர்.
விடுதலை நாள் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

