/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.3 லட்சம் மோசடி
/
இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.3 லட்சம் மோசடி
இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.3 லட்சம் மோசடி
இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.3 லட்சம் மோசடி
ADDED : நவ 02, 2025 03:59 AM
புதுச்சேரி: இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி, புதுச்சேரி நபரிடம் ரூ. 3 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.
இதைநம்பி, மர்ம நபருக்கு ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 417 அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பின் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், ஆன்லைனில் அழகு சாதன பொருட்கள் ஆர்டர் செய்து ஒரு லட்சத்து 7 ஆயிரம், ஏம்பலத்தை சேர்ந்தவர் 53 ஆயிரத்து 733, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் 22 ஆயிரம், வெங்கடா நகரை சேர்ந்தவர் போலி கேரளா லாட்டாரி சீட்டு வாங்கி, 5 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்த பெண் பேஸ்புக்கில் புடவை ஆர்டர் செய்து 7 ஆயிரத்து 340, என 6 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து, ஆயிரத்து 490 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

