/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்ட சபையில் வாழ்த்து
/
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்ட சபையில் வாழ்த்து
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்ட சபையில் வாழ்த்து
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்ட சபையில் வாழ்த்து
ADDED : மார் 20, 2025 04:42 AM
புதுச்சேரி: சட்டசபையில் சபாநாயகர் செல்வம் பேசிய தாவது:
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024 ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர். அவர்கள் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் 9 மாதமாக அங்கேயே தங்க நேர்ந்தது. சுனிதா இந்திய மற்றும் சுலோவீனிய பாரம்பரியதை் கொண்டாட சுலோவீனிய தேசியக்கொடி, பகவத்கீதை, பிள்ளையார் படம், தன்னுடன் விண்வெளிக்கு கொண்டு சென்றிருந்தார்.
கடந்த 18ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரை பூமிக்கு அழைத்து வரும் பணி தொடங்கியது. டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து இன்று அதிகாலை 3:30 மணிக்கு பூமியை வந்தடைந்தது.
புளோரிடா கடலில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.
மீட்பு படையினர் விண்வெளி வீரர்கள் வந்த விண்கலத்தை மீட்டு, அவர்களை பத்திரமாக அழைத்து வந்தனர். பிரதமர் மோடி, இந்தியா தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்க காத்திருப்பதாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்டசபை தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக் களையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து எம்.எல்.ஏ.,க்ககள் அனைவரும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.