/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் புகழாரம்
/
'புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் புகழாரம்
ADDED : நவ 02, 2024 07:16 AM
புதுச்சேரி, நவ. 2-
புதுச்சேரி ராஜ்நிவாசில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா நேற்று நடந்தது.
விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், அரசு செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், புதுச்சேரியில் வாழும் ஆந்திரா, சத்திஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, அந்தமான், நிக்கோபார் தீவுகள், சண்டிகர், டில்லி மற்றும் லட்சதீவைச் சேர்ந்த பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், கவனர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'புதுச்சேரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இது சிறப்பான சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல் பல்வேறு மாநில பண்பாடுகளையும் பிரதிபலிக்கும் 'குட்டி இந்தியாவாக' உருவாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் நடக்கும், இது போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக நம்முடைய சசோதரத்துவத்தை நாம் பலப்படுத்திக் கொள்ள முடிகிறது. நம்முடைய மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலை, வரலாறு எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து பார்த்து இந்தியர்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது' என்றார்.
தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை வரலாற்றை விளக்கும் விதமாக கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள் கவர்னருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

